அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..?

  • நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளார். மருத்துவ பரிசோனைக்காக செல்லும் ரஜினிகாந்துடன், இவர் குடும்பத்தாரும் அங்கு செல்லவிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று இருக்கும் சூழ்நிலையால், மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் செல்லவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், மருத்துவ பரிசோதனை முடிந்து சிறிது நாட்கள் அங்கு ஓய்வு எடுத்த பின்னர் திரும்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.