அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்காவில் இன்று பிற்பகல் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று பிற்பகல் 12.29 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் கீழ் 41.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகள், பொருளிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.