2026 மற்றும் 2032 லும் கொரோனா பரவும்..அமெரிக்க தடுப்பூசி நிபுரணர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா மூலத்தை கண்டுபிடிக்காவிடில் எதிர்காலத்தில் பெருந்தொற்றை தவிர்க்க இயலாது.

கொரோனா பெருந்தொற்று உலகமக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கோடியை  தாண்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச நாடுகளின் பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மை, குழந்தைகளின் கல்வி ஆகியவை கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகில் கொரோனாவானது சீனாவில் உள்ள வுஹான் நகரத்திலிருந்துதான் பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது, இதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே தற்போது பல ஆதாரங்களை உல நாடுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் 2 நோய்த்தடுப்பு நிபுணர்கள் உலகில் தற்போது பரவிய கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை அறிய சீனாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியுள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவின் மூலத்தை கண்டறிந்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்றை தவிர்க்க இயலும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்களில் ஒருவரான அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக முன்னாள் ஆணையர் ஸ்காட் போட்லி சீனாவிலிருந்துதான் கொரோனா பரவியது என்பதற்கு ஆதாராங்கள் வழுத்து வரும் நிலையில் அதை தவறு என சீனா எந்த ஆதாரத்தையும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து டெக்ஸாஸ் தடுப்பூசி வளர்ச்சி நிபுணரான பீட்டர் ஜேய் ஹோட்டெசும் கொரோனா வைரஸின் மூலத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் வரும் 2026 மற்றும் 2032 ஆம் ஆண்டுகளிலும் இந்த தொற்று திரும்ப பரவும் என தான் கருதுவதாக கூறியுள்ளார்.