அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்…! சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருது அறிவிப்பு…!

  • அமெரிக்காவில் டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்.
  • சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிப்பு.

அமெரிக்காவில், மின்னப்போலிஸ் நகரில், கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து, பிளாய்டின் கழுத்தில் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை டார்னெல்லா பிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்துள்ளார். அவருக்கு வயது 17.

ஜார்ஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியுலகிற்கு தெரிவதற்கு இந்த வீடியோ தான் முக்கிய காரணமாக அமைந்தது. உலகம் முழுவதும் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவல் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து, போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு வழக்கு விசாரணை முடிந்து, தண்டனையும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவை பதிவு செய்த டார்னெல்லா பிரேசியர் இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1917-ஆம் ஆண்டு புலிட்சர் விருதானது, ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு தான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளம்பெண் டார்னெல்லா பிரேசியருக்கு ஊடகப் பிரிவில் புலிட்சர்  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.