BREAKING NEWS:கர்நாடகாவில் ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி : முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்து!

கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து  முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இது பதவி ஏற்ற பின் முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற எடியூரப்பா தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் பணியை தொடங்கினார்.இதில் கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து  முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடியூரப்பா. இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் … Read more

சென்னையில் நிலுவைத் தொகை வழங்காத உபேர் நிறுவனத்தை கண்டித்து, தீக்குளிக்க முயற்சித்த ஓட்டுனர்!

சென்னை அருகே  உபேர் கால் டாக்சி நிறுவனம் நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து, ஓட்டுனர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை ஆலந்தூரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நிலுவைத் தொகைகளை தரவில்லை என்று புகார் கூறி, ஏற்கனவே ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உபேர் அலுவலகம் சென்ற ஓட்டுனர்கள் சிலர், உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முறையான … Read more

BREAKING NEWS:பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடியூரப்பா!

பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடியூரப்பா. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில் பேரவைக்கு வந்தார் எடியூரப்பா பேரவையில் வாயிற்படியை தொட்டு வணங்கி உள்ளே சென்றார் எடியூரப்பா. சற்று முன்தான் கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா. கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் … Read more

 நாமக்கல் அருகே கிரானைட் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீருக்கும் வழியின்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார்!

கிரானைட் குவாரிகளால் நாமக்கல் அருகே  4 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீருக்கும் வழியின்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சுள்ளி பாளையம், சித்தம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர்சாகுபடி செழிப்பாக நடைபெற்று வந்ததெல்லாம், 10 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சிதான். தற்போது கால்நடைகளுக்கு புல் கூட இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிரானைட் குவாரி அமைப்பவர்கள் நிலம் கேட்டபோது நல்ல விலை கிடைத்ததால் விற்றுவிட்ட கிராமத்தினர் தற்போது குடிநீரும் உப்பாகிப்போய் விட்டதாக … Read more

BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்பு!

தற்போது கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளர். இதேபோல் மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறுகையில்,காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் .சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது, பாஜகவின் வாடிக்கையாக … Read more

BREAKING NEWS: மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதமர் மோடியின் பிடியில் உள்ளார்!பகீர் தகவலை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி.!

ஆனந்த் சிங் தவிர அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களும் எங்களுடன் இருக்கின்றனர்.ஆனால்  மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் பிரதமர் மோடியின் பிடியில் உள்ளார் என்று  பெங்களூருவில் காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல் மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறுகையில்,காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் .சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, பிரதமர் … Read more

உயர்நீதிமன்றம் பேராசிரியர் நிர்மலா தேவியை சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது!

சென்னை உயர்நீதிமன்றம்,கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை,  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதவியல் துறை பேராசிரியர் நிர்மலா தேவி,  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் … Read more

BREAKING NEWS:ஆதாயத்துக்காக மஜதவை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது!அமித் ஷா கடும் சாடல்

காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல்காந்தி மறந்துவிடக்கூடாது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து  பாஜக தலைவர் அமித் ஷா கூறுகையில், தேர்தலுக்கு பின் அரசியல் ஆதாயத்துக்காக மஜதவை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. கர்நாடக மக்கள் யாரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது தேர்தல் முடியில் தெளிவாக தெரிகிறது என்றும் பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார் . கர்நாடக சட்டசபை தேர்தல்:  கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 … Read more

பா.ஜ.க. ஆட்சி அமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்து என ராகுல்காந்தி விமர்சனம்..!

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை … Read more

BREAKING NEWS:பாஜகவின் ஒரே வேலை எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதுதான்!எம்.எல்.ஏக்களை பாதுகாக்க புதிய ப்ளான் உள்ளது!குமாரசாமி

காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் .சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம். என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது, பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு … Read more