காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் புதிய ஆட்சி தீர்ப்பின் படி செயல்படும்!மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் கட்சி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக  கூறியுள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைத்தால் தமிழகத்திற்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீர் கிடைத்துவிடும் என்று கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

BREAKING NEWS:பி.இ ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

பி.இ ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பம்: 2018-19-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், கலந்தாய்வு, சான்றுகள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று அரசு அறிவித்தது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பம்  இதனிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு  கடந்த மே 3ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் மே 30-ம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைன் … Read more

பகலில் ஒரு வேஷம்!இரவில் ஒரு வேஷம்!புத்திசாலித்தனமான கொள்ளையர்கள் கைது!

பகலில் ஆட்டோ ஓட்டுனர்களாகவும் இரவில் வாகனங்களை திருடியும்,வழிபறியிலும் ஈடுபட்டு வந்த 4 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகர் 6 வது அவென்யூவில் அதிகாலை பாண்டியன் என்பவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். அப்போது பாண்டியன் கூச்சலிட்டதும், அருகில் உள்ள பொதுமக்கள் தப்பி செல்ல முயன்ற நான்கு பேரையும் பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நான்கு பேரிடம் விசாரணை செய்த போது போலீசாருக்கு பல … Read more

BREAKING NEWS:மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 2 ஆவது இடம்!1,208 இடங்களில் முன்னிலையில் உள்ள மம்தா கட்சி !

இன்று காலை மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. கடந்த 14ம் தேதி மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஜல்பய்குரியின் பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 40 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 2 ஆவது இடத்தில் உள்ளது. 1,208 இடங்களில் முன்னிலையில் … Read more

நேற்றிரவு ரமலான் நோன்பிற்கான பிறை தென்பட்டது! அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை

இன்று  இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமிய மாதங்களில் ரமலான் மாதத்தில்தான் புனித நூலான குர் ஆனின் வசனங்கள் இறைவன் மூலம் கிடைக்கப்பெற்றதாக நம்பப்படுகிறது. எனவே அந்த மாதத்தை நோன்பு மாதமாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், செல்வந்தர்களும் பசியின் தீவிரத்தையும், உணவு கிடைக்காதவர்களின் நிலையையும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிக்கின்றனர். நாள் முழுவதும் நோன்பிருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு … Read more

BREAKING NEWS:நாளை அல்லது நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள்! கர்நாடக  முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

நாளை அல்லது நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள் என்று கர்நாடக  முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பெரும்பான்மையை நிரூபிப்போம், தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளேன் என்று கர்நாடக  முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இது பதவி ஏற்ற பின் முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற எடியூரப்பா தலைமை செயலகம் வந்து … Read more

BREAKING NEWS:உச்சத்தில் டீசல் விலை!விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் ஸ்டிரைக் !

டெல்லியில் மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் நடத்தினர். டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தினமும் டீசல் விலை உயர்த்தப்படுவதால் லாரி தொழில் அழிந்துவிட்டது என்று தெரிவித்தனர். இன்றைய  பெட்ரோல் ரூ.78.16, டீசல் ரூ.70.49: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் … Read more

 தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு 2,000 புதிய பேருந்துகள்!

தமிழகம் முழுவதும்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்துகளின் மாதிரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆயிரத்து 900 பேருந்துகள் மற்றும் 100 சிற்றுந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு கூண்டு கட்டும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. புதிய வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள பேருந்துகளின் மாதிரிகள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு … Read more

 இன்று காலை தொடங்கியது மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி !

இன்று காலை மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. கடந்த 14ம் தேதி மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஜல்பய்குரியின் பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 40 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்பு!

தற்போது கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்ற்றுள்ளர்.   இதேபோல் எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டுள்ளனர். எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா … Read more