சசிகலா-நடராஜன் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் : ஜெவின் அண்ணன்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் எனகூறி ஜெவின் மகள் என அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர வலியுறித்து தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை பற்றி ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறும்போது ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான், அது யாரென்று தெரியவில்லை ஒருவேளை அது அம்ருதாவாக இருக்கலாம் என கூறி ஜெயலிதாவிற்கு மகள் பிறந்ததை கூறி பரபரப்பை அதிகபடுத்தினார். இந்நிலையில் தற்போது, … Read more

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு … Read more

தமிழக அரசிடமிருந்து ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு நோட்டீஸ்…!

தமிழகத்தில் நிஸான் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை தருவதாக உறுதி அளித்தபடி தமிழகஅரசு தராததால், ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு தமிழக அரசின் மீதான புகார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.மேலும் நிஸான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையானது தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தால் தமிழக தொழில்துறை சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

தினகரன் எல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை அமைச்சர் ஜெயக்குமார் சீண்டல்…!

தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை. தினகரன் என்பவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் அவர் எந்த கட்சியையும் சாரதவராகத்தான்,அவர் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது இன்னும் அறிவிக்கவில்லை.மேலும்அவர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி மனுதாக்கலின் போது கூட்டத்தை கூட்டினார் டிடிவி தினகரன் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக அரசு தமிழக மீனவர்களை மீட்கும் பணியில் தீவிரம் : முதல்வர் E.PS

கடலுக்குள் 29 படகுகளில் 106 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து 18 படகுகளில் இருந்த 76 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மீதமுள்ள 11 படகுகளில் இருக்கும் 30 மீனவர்களை துரிதமாக மீட்க மாண்புமிகு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தினார்கள். கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்களான ‘வைபவ்’ மற்றும் ‘ஆதேஷ்’ ஆகியன இப்பணியில் ஈடுபட்டுள்ளன என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தினகரன் கொடுத்த வழக்கு ஒத்திவைப்பு

அர்கே நகரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் தான் ஏற்கனவே போட்டியிட்ட தொப்பி சின்னத்தையே எனக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் யாரும் தொப்பி சின்னத்தில் போட்டியிடாமல் இருந்தால் சின்னத்தை ஒதுக்குவதாக உச்சநீதிமன்றர்த்தில் கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே தொப்பி சின்னம் வேண்டும் என 3 வேட்பாளர்கள் கூறியதாக இபிஎஸ் ஓபிஎஸ் சார்பில் வாதிடபட்டதால் இந்த வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.

டிசம்பர் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் : ஜெ தீபா

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேட்சையாக களமிறங்கும் T.T.V.தினகரன் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, தானும் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். அவர் டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருதாவை நான் இதுவரை பார்த்தது … Read more

அதிமுக சார்பில் மதுசூதனன் வேட்புமனுதாக்கல் செய்தார்

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். முதலில் திமுக சார்பில் மருதுகணேஷ் , பிறகு சுயேச்சை வேட்பாளராக T.T.V.தினகரன் அவர்களை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், விருப்பமனுவை தாக்கல் செய்த முன்னால் எம்பி பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.

T.T.V.தினகரன் வேட்புமனுதாக்கால் செய்தார்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் பணபட்டுவாடா போன்ற பிரச்சனைகளால் அத்தேர்தல் ரத்து செய்யபாட்டு தற்போது, ஆர்கே நகரில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து தற்போது T.T.V.தினகரன் தற்போது வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் அதிமுக கொடியை பயன்படுத்தமுடியாததால் அண்ணா உருவம் இல்லாத, கருப்பு, சிவப்பு, வெள்ளை என வர்ணக்கொடியை பயன்படுத்தினார். மேலும் தொப்பி சின்னத்தை தனக்கே … Read more

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவரவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என திமுகவின் குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.