ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசியம் என்ன?! உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.இதனை ஜெ.தீபாவும், தீபக்கும் எதிர்த்தனர். இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து கூறுகையில், மக்களின் வரிப்பணத்தில் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற அவசியம் என்ன என்றும், அவரது புகழை பரப்ப பல்வேறு வழிகள் இருக்கும் போது இத்தனை கோடி செலவில் நினைவிடம் அமைப்பதில் ஆட்சேபனை தெரிவித்தது சென்னை உயர்நீதி மன்றம்.

என் உயிருக்கு அச்சுறுத்தல் : சசிகலா குடும்பம்தான் காரணம் – ஜெ தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குரிப்பிடபட்டுள்ளதவது, தன்னை தொலைபேசியில் சிலர் தொடர்புகொண்டு மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து எனவும் இதற்க்கு சசிகலா குடும்பத்தார்தான் காரணம் எனவும் அதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்க்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக ஜெ தீபா தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

டிசம்பர் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் : ஜெ தீபா

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேட்சையாக களமிறங்கும் T.T.V.தினகரன் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, தானும் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். அவர் டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருதாவை நான் இதுவரை பார்த்தது … Read more