த.மா.க யாருடன் கூட்டணி? – வரும் 12ல் முடிவு.!

GKVasan

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.  இந்த … Read more

40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை களத்தில் காட்டுவோம் -முதல்வர் ஸ்டாலின்

mk stalin

அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம் என்று அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்த வேண்டும். எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயராது … Read more

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி – திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

thirumavalavan

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கியும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த … Read more

பிப்.13 முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே!

mallikarjuna kharge

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி … Read more

வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Election Commission of India - Whatsapp fake news

ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக  தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது.  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

பாஜகவுக்காக ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்போம்.! வானதி சீனிவாசன் பேட்டி.!

BJP MLA Vanathi Srinivasan - Kamalhaasan - Rajinikanth

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி முக்கிய பொறுப்பில் இருப்பவருமான வானதி சீனிவாசன், இன்று தென் சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அந்த விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் ,  நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.!  அவர் கூறுகையில், நாங்கள் பாஜவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்போம். ஏன் தேவைப்பட்டால் ரஜினி, கமல், விஜய் … Read more

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை!

admk

நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றனர். அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதி என பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்தி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்தாலும் பாஜகவும் தற்போது தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. … Read more

நாடாளுமன்ற தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

மக்களவை தேர்தல் – வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?

eligible voter

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என … Read more

மக்களவை தேர்தல் – ஜன28ல் ஆம் ஆத்மி பேரணி!

AAP RALLY

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குறுதி என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்படி, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி … Read more