த.மா.க யாருடன் கூட்டணி? – வரும் 12ல் முடிவு.!

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.  இந்த நிலையில், சென்னையில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசினார்.

அப்போது அவர், “இம்மாதம் 12ம் தேதி காலை 10 மணிக்கு த.மா.காவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பொதுக்குழு நிர்வாகிகள் கலந்துக் கொள்வார்கள். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்தபின், யாருடன் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி – திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

இதற்கிடையில்,நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment