Tamil News Today Live : நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள்… இன்னும் பல நிகழ்வுகள்…

Tamil News Today Live

Tamil News Today Live : வரும் மக்களவை தேர்தல் குறித்து தொகுதி பங்கீடு வேளைகளில் திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக உடன் தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அமைச்சர் ராஜினாமா, ஆளும்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் நகர்வுகளை ஆளும் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இதுபோல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணாலாம் ….

2021இல் அதிமுக 7 எம்.பி சீட்களை வென்றுள்ளது.! இபிஎஸ் போட்ட புது கணக்கு.! 

ADMK Chief secretary Edappadi palanisamy

மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும், மக்களவை தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். மதுரையில் திமுக – அதிமுக : மதுரையில் திமுக அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. … Read more

கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!

seeman

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் … Read more

இன்றும், நாளையும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்.. சுமார் 11,000 நிர்வாகிகள் பங்கேற்பு!

Bjp National Council Meet

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறன்றனர். அதன்படி, கூட்டணி மற்றும் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல் அறிவிக்க தயாரிப்பு, வேட்பளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பரப்புரை என அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லி பாரத் மண்டபத்தில் … Read more

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி – ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு

Farooq Abdullah

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் சுமார் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகிய இந்தியா கூட்டணியில் தற்போது அடுத்தடுத்து பெரும் அடி விழுந்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து … Read more

மக்களவை தேர்தல்: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – திமுக அறிவிப்பு

DMK Leader MK Stalin

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயுதமாகி வருகிறது. தேசிய கட்சிகளுடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக என தனித்தனி கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதில் குறிப்பாக, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் திமுக தீவிரமாக … Read more

பாஜகவின் அத்தனை பாவங்களுக்கும் அதிமுக உடந்தை… முதலமைச்சர் ஸ்டாலின்!

mk stalin

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ‘இன்றைய உரிமை முழுக்கமே நாளைய வெற்றி முழுக்கம்’ என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. திமுகவின் கொள்கை முழக்கம் பாசிச சக்திகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக ஒரு மாநில கட்சி என்பதை போகுமிடமெல்லாம் பாஜகவினர் விமர்சனம் செய்கிறார்கள். அதாவது, திமுக என்பது மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள், ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் திமுகவை விமர்சித்துப் … Read more

லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை – அண்ணாமலை

annamalai

தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருப்பதால் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சரும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதன்பின் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், மக்கள் … Read more

தொகுதி பங்கீடு! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்… விசிக தலைவர் பேட்டி!

thol thirumavalavan

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான … Read more

தமிழகம் வரும் ஜே.பி.நட்டா… மையக்குழுவுடன் நாளை சென்னையில் ஆலோசனை!

jp nadda

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், ’என் மண் என் மக்கள்’ நாளை சென்னையில் நிறைவு பெறுகிறது. … Read more