தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Congress Candidate Manickam Tagore

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம். கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை … Read more

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

Supreme Court of India - Election Commission of India

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுகையில், VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதிக்கட்ட விசாரணை … Read more

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT case - Supreme court of India

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள் மூலம் இயந்திரமயமானது முதலே அதில் பதிவாகும் வாக்குக்களின் உண்மைத்தன்மை குறித்த பல்வேறு சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை ஹேக் செய்து ஒரு சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிய வைக்கிறார்கள், கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்த சந்தேகங்கள் தற்போது … Read more

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

LokSabha Elections 2024

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி  21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26இல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள … Read more

தேர்தல் விதிமுறைகளை மீறுகிறாரா பிரதமர் மோடி.? மதத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம்.!

PM Modi speech in Rajasthan

PM Modi : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் , புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19இல் ராஜஸ்தான்  மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, வரும் … Read more

பிரஸ் மீட் இல்லை… விளக்கம் இல்லை… அதிரடியாய் அறிவித்த தேர்தல் ஆணையம்.!

Election Commission of India - Vote in Tamilnadu

Election2024 : தமிழகத்தில் 69.46%வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் … Read more

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Tamilnadu Puducherry Election Polling

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தமாக 102 தொகுதிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து … Read more

வாக்களிக்க செல்ல இயலாதோர் கவனத்திற்கு… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Senior Citizen in Vote

Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் … Read more

தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… தேர்தல் ஆணையம் தகவல்.!

Election Commissioner - Sathya Pratha Sahoo

Election2024 : தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடங்கி திருச்சி, ஈரோடு, கோவை  என பல்வேறு பகுதிகளில் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 18ஆம் … Read more

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னம்.! தேர்தல் ஆணையம் விளக்கம்.!

Karumbu Vivasayi - Election comission of India

Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு … Read more