வேட்புமனு தாக்கலின்போது கடும் வாக்குவாதம்… நடந்தது என்ன? திமுக – அதிமுக விளக்கம்!

d jayakumar

DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!

DMK vs ADMK

DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக  அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் … Read more

சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Minister Udhayanidhi stalin - Madras high court

Udhayanidhi Stalin – கடந்த வருடம் 20203 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்வில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடன் இருந்தார். Read More – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!  இது போல, பல்வேறு மேடைகளில் திமுக எம்பி … Read more

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

Minister Sekar babu - Sabarimala Ayyappan

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் … Read more

நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

Tamilisai soundarajan says about Thoothudi Floods

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக … Read more

பாண்டிச்சேரி கவர்னர் வேலையை பார்க்க சொல்லுங்க.! தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு அட்வைஸ்.!

Minister Sekar Babu - Tamilisai Soundarajan

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அப்பகுதிகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆணையர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் … Read more

சென்னைக்கு புதுவரவு… பொங்கலுக்கு திறக்கப்படும் கலைஞர் பேருந்து முனையம்.! முதல்வர் திறப்பு…

Tamilnadu CM MK Stalin - Kelambakkam bus stand

சென்னை முக்கிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம், பெருங்குளத்தூர் ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் கோயம்பேடு பேருந்து நிலையம் போல பிரமாண்ட பேருந்து நிலையம் சென்னையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை ஈடுசெய்ய, சென்னை பேருந்து போக்குவரத்து சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஜிஎஸ்டி சாலையில் கிளம்பாக்கத்தில் 86 ஏக்கரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக அரசு கட்டமைத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிட்ட இந்த … Read more

அண்ணாமலை வெளியிடட்டும்..! எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சேகர் பாபு பேட்டி.  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, எனது சொத்து பட்டியலை வெளியிடும் அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்  பாபு, அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். திமுக லஞ்ச … Read more

சென்னையில் உணவு திருவிழா தொடக்கம்..!

சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா தொடக்கம்.  சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.  இந்த உணவு திருவிழாவை அமைச்சர் நா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்.  சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் … Read more