முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார். அதனால்.., சேகர்பாபு பரபரப்பு

Minister Sekar Babu

Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு. இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார். … Read more

வேட்புமனு தாக்கலின்போது கடும் வாக்குவாதம்… நடந்தது என்ன? திமுக – அதிமுக விளக்கம்!

d jayakumar

DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!

DMK vs ADMK

DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக  அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் … Read more

சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Minister Udhayanidhi stalin - Madras high court

Udhayanidhi Stalin – கடந்த வருடம் 20203 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்வில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடன் இருந்தார். Read More – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!  இது போல, பல்வேறு மேடைகளில் திமுக எம்பி … Read more

கோயில் காணிக்கை நகைகள்.. விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு.!

Minister sekar babu says about tamilnadu temples

இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு… அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. 90 சதவீத பணிகள் நிறைவு.! – அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

Minister Sekar babu says about Kilampakkam Bus Stand

சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். … Read more

கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.. அமைச்சர் சேகர்பாபு

sekar babu

மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் … Read more

இளைஞரணி மாநாட்டை திசை திருப்பும் நோக்கம்- அமைச்சர் சேகர்பாபு..!

Sekar Babu

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில்” நாளை அயோத்தி கோயில் குடமுழுக்கு நேரலையை கோவில்களில் ஒளிபரப்பவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் காவல்துறையை அனுமதி மறுப்பது கண்டத்துக்குரியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை, பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. … Read more

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

Minister Sekar babu - Sabarimala Ayyappan

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் … Read more

நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

Tamilisai soundarajan says about Thoothudi Floods

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக … Read more