#BREAKING: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு.  சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை வயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் பிரேமலதா வழக்கு தொடுத்திருந்தார். தனக்கு எதிரான தேர்தல் … Read more

சென்னை மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்.  சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் … Read more

அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வருத்தம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமிழகத்துக்கு தேவையான ஒரு முக்கியமான விஷயம் நடைபெற்றுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் கூறியுள்ளார். மேலும், தலைவர், அமைச்சர்கள், சட்டமனற்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தோழர்கள் மக்களுக்கான பணியை … Read more

தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ தெரிவித்திருந்தது. அதாவது, நாடு முழுவதும் மொத்தமாக 23% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்திற்கு கடந்த 11-ம் தேதி வரை வழங்கப்பட்ட 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% தடுப்பூசிகளை வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனம் செய்து … Read more

இந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன்…! – உதயநிதிஸ்டாலின்

இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் பால் விலை குறைந்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் … Read more

சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி – உதயநிதி ஸ்டாலின் போட்டி.!

சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று திமுக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜலட்சுமி சென்னை காவல் நிலை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் முதல்வர் குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ராஜலட்சுமி இதுதொடர்பான வீடியோவையும் போலீசாரிடம் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்.!

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக இளைஞர் பிரிவு செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், திமுக இளைஞர் பிரிவு செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது … Read more