#BREAKING: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு. 

சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை வயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் பிரேமலதா வழக்கு தொடுத்திருந்தார். தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, உதயநிதி மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் வாக்காளர் பிரேமலதாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. முன்னதாக இந்த மனுக்களின் மீதான விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு திமுக எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றிருந்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரை எம்எல் ரவி என்பவர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வாழக்கை ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து பிரேமலதா என்ற வாக்காளர் இந்த வழக்கை தொடுத்திருந்தார். அந்த வழக்கும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்