ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை…  சரியாக கேட்ச் பிடித்த மனிதர்… வைரல் வீடியோ இதோ…

சீனாவில் , 5வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக ஒரு நபர் பிடித்ததால் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.   சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டோங்சியாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 வது மாடியில் இருந்து ஒரு 2 வயது குழந்தை தவறி கிழே விழுந்தது. அந்த குழந்தை மாடியில் இருப்பதை கவனித்த அந்த பகுதில் கார் நிறுத்த சென்ற ஒரு நபர், குழந்தை தவறி தரையில் விழுவதற்கு … Read more

மீண்டும் சீனாவில் உயரம் தொட்ட கொரோனா.! கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது அதிகமாம்.!

சீனாவில் புதன் கிழமை 292 ஆக இருந்த கொரோனா என்னைகை, நேற்று வியாழக்கிழமை அன்று 432ஆக எகிறியுள்ளது சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே கடந்த 2 வருடமாக ஆட்டம் காண வைத்துவிட்டது. தற்போது தான் அந்த கொரோனாவை அனைவரும் மறந்து வரும் நிலையில், தற்போது சற்று கொஞ்சம் அந்த கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே நமது நாட்டில் முக்கிய நகரங்களில் கட்டாய முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகள் எட்டிப்பார்க்கின்றன, தற்போது சீனாவில் … Read more

44thChessOlympiad:செஸ் ஒலிம்பியாட் போட்டி – சீனா திடீர் விலகல்!

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது.ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக,2014,2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது.குறிப்பாக,சீன மகளிர் அணியினர் இதற்கு முன் … Read more

#ShockingVideo:சற்று முன்…புறப்படுவதற்கு தயாரான விமானத்தில் திடீர் தீ விபத்து- 122 பேரின் நிலை என்ன?..!

மேற்கு சீனாவில் ஓடுபாதையில் இருந்து டிவி9833 என்ற விமானம் திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படவிருந்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திபெத் ஏர்லைன்ஸ் விமானம் சீனாவில் இருந்து திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படவிருந்தபோது சற்று முன்னர் ஓடுபாதையில் இருந்து இருந்து விலகிய நிலையில் விமானத்தின் இடது பக்கத்தில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.இதனால்,விமானம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,உடனே விமானத்தின் பின்பக்க கதவில் உள்ள ஒரு வெளியேற்ற ஸ்லைடு வழியாக மக்கள் தப்பி விமானத்திலிருந்து இருந்து … Read more

மூன்றாவது குழந்தை பெற்றால் அதிரடி ஆப்பர் வழங்கும் சீன நிறுவனம்…!

மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனஸ் மற்றும் ஒரு வருடம் விடுமுறை வழங்கும் சீன நிறுவனம்.  சீனாவில் ஒரு குழந்தை கொள்கைக்கு 2016இல் அதிகாரபூர்வமாக  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது சீன அரசாங்கம் மக்களை அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. சமீபத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் ஊழியர்களுக்கு ஒரு சீன நிறுவனம் ஊக்கத் தொகை  வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனசாக வழங்கப்படும் என்றும், நிறுவனத்தை சேர்ந்த பெண் … Read more

இந்திய மாணவர்களை தங்கள் நாட்டிற்கும் அனுமதிக்க ஒப்புக்கொண்ட சீனா …!

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். கிட்டத்தட்ட சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குறைந்து வரும் ஓரோனா பரவல் காரணமாக சீனாவில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே சீனாவில் முன்பு படித்து … Read more

இந்த நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தடை!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த  மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.முன்னதாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,அங்கு பயிலும் 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவை … Read more

இனிமேல் இந்த விசா செல்லாது…! இந்தியா அதிரடி நடவடிக்கை…!

சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவிப்பு.  கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு,  இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று  தங்களது படிப்பை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து … Read more

சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா: 10 நகரங்களில் ஊரடங்கு..!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின்  சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று … Read more

இந்தியா மற்றும் சீனா ராணுவ பேச்சுவார்த்தை..!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கமாண்டர் நிலை 15வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி இந்தியப் பக்கத்தில் உள்ள சுஷுல் மோல்டோ சந்திப்புப் புள்ளியில் நடைபெறும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே 14 சுற்று பேச்சு வார்த்தை பல பிரச்சனைகளுக்காக நடைபெற்றது.  அதில், பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள், கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் கோக்ரா வெப்ப நீரூற்றுகள் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தை … Read more