இந்திய மாணவர்களை தங்கள் நாட்டிற்கும் அனுமதிக்க ஒப்புக்கொண்ட சீனா …!

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர்.

கிட்டத்தட்ட சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குறைந்து வரும் ஓரோனா பரவல் காரணமாக சீனாவில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே சீனாவில் முன்பு படித்து வந்த இந்திய மாணவர்கள் பலரும் மீண்டும் அங்கு சென்று தங்கள் படிப்பை தொடர்வதற்கு ஆர்வம் கொள்கின்றனர்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்தை சீனா நிறுத்தி விட்டது. எனவே இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருந்து வருகிறது.இந்நிலையில்,  இந்திய மாணவர்கள் சீனாவில் நடக்கும் வகுப்புகளை ஆன்லைன் மூலமாக கற்று கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான பிரச்சினை தற்பொழுது சீனாவுக்கு தெரியவந்துள்ள நிலையில், இந்திய மாணவர்களுக்கான ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அவர்கள் கூறுகையில் இந்திய மாணவர்கள் சீனா வந்து தங்கள் படிப்பை தொடர்வதற்கு சீனா உயர் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுக்கு இந்தியாவை தவிர பிற நாட்டு மாணவர்கள் பின்பற்றிய நடைமுறை மற்றும் அனுபவத்தை இந்தியாவிடம் தாங்கள் பகிர்ந்து கொண்டதாகவும் ஏற்கனவே இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வருவதற்கான பணி தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடைசியாக இந்தியா செய்ய வேண்டியது ஒன்று தான். எந்த மாணவர்கள் சீனாவுக்கு வந்து படிக்க விரும்புகிறார்களோ அவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும் என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

author avatar
Rebekal