மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

Udhayanidhi Stalin about lover movie

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம். பெரிதும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் பார்த்துவிட்டு பாராட்டும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தனுஷ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு … Read more

இளைஞரணி மாநாட்டில் வீர வாள், கேடயத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..!

DMKYouthWingConference

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு  நடைபெற்று வருகிறது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். காலை 10 … Read more

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் வியக்கவைத்த பிரம்மாண்ட ட்ரோன் கண்காட்சி

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் இடம்பெற்ற ட்ரோன் கண்காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்தது. தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாநாடு நடைபெறும் திடலுக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு சுடரினை … Read more

திமுக இளைஞரணி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்திற்கு பயணம்!

mk stalin

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக சேலத்தில் நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு உள்ளது. திமுக இளைஞரணி தலைவரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நிகழ்வுகள் இன்று … Read more

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் என பலர் பங்கேற்றனர், இதன் போது பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை … Read more

தேர்தல் பணி… மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

udhayanidhi stalin

நாடளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், சில கட்சிகள் தேர்தல் பணி குழுவை அமைத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு … Read more

திமுக இளைஞரணி மாநாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.!

mk stalin

திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக இளைஞரணி … Read more

டிசம்பர் 20, 21..! திமுக இளைஞரணி மாநாடு நிகழ்ச்சி நிரல்கள் என்னென்ன.? உதயநிதி விளக்கம்…

Minister Udhayanidhi stalin says about DMK4YOUTH maanaadu

திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. இது குறித்து திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.! அவர் கூறுகையில், கடந்த வருடம் … Read more

தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.!

Edappadi Palanisamy - Udhayanidhi stalin

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishtha) வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட தேசிய தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழா … Read more

ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhyanithi stalin

திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டத்தை சென்னை சிம்சன் பெரியார் சிலையில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து மாநாடு சுடர் தொடர் … Read more