கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் பகுதியை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…!

கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.  சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள … Read more

#BREAKING : அண்ணா பல்கலை.., ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் ..!

அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின்  நியமனம்.  அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். அதேபோல கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#BREAKING : நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி…!

நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி. இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும்  கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற … Read more

9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சைக்கோ’ படம்..!

தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனீங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான … Read more

இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மகன்..!

இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை சிறப்பாக செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், எம்.எல்.ஏ. மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தற்போது இந்திய அளவு கால்பந்து போட்டியில் தேர்வாகியுள்ளார். … Read more

உதயநிதி ஸ்டாலினின் "சைக்கோ" படத்தின் டீஸர் இன்று ரிலீஸ் !

தமிழ் சினிமாவில் ‘ஒரு கல் ஒரு ஙண்ணாடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் இதன் பிறகு இது கதிர்வெலன் கதால், நண்பேன்டா, சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் … Read more

வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என் செயல்பாடு தக்க பதிலடி தரும்-உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளராக  உதயநிதி   நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர்  இளைஞரணி செயலாளரான பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்து  தான் நியமிக்கப்பட்டது குறித்து கூறுகையில் திமுக இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை இது எனக்கானது மட்டுமல்ல திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என்று கூறினார் மேலும் அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ,நிறைய … Read more

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

தி.மு.க. கட்சியின்  இளைஞர் அணி செயலாளராக மு க  ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பதவில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார் அவருடன் அக்கட்சியின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவரும் உதயநிதி ஸ்டாலின் தந்தையுமான மு க ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது

அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. கட்சியின்  இளைஞர் அணி செயலாளராக மு க  ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பதவில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.