இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மகன்..!

இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை சிறப்பாக செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், எம்.எல்.ஏ. மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தற்போது இந்திய அளவு கால்பந்து போட்டியில் தேர்வாகியுள்ளார்.

இவர்களது குடும்பம் அரசியல் குடும்பம் என்றாலும், மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாட்டை மிகுந்த ஆர்வத்தோடு பார்ப்பார். அதிலும் கிரிக்கெட் வீரரான சச்சினின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. தற்போது இவரின் கொள்ளுபேரனான இன்பநிதி கால்பந்து விளையாட்டில் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக இன்பநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இவர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்பன் உதயநிதியை தேர்வு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆகையால், இந்தியன் ஐ-லீக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தகவல் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.