விஜயகாந்த் போல நடிகர் வரலாம்… அவரைப்போல ஒரு மனிதர் மீண்டும் பிறக்கப்போவதில்லை… சீமான் வருத்தம்.!

DMDK Leader Vijayakanth - NTK Leader Seeman

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முதலில் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகதிற்கு விஜயகாந்த் உடல் கொண்டுசெல்லப்பட்டது. அதனை தொடர்ந்து , சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் , தொண்டர்கள் என பலர் விஜயகாந்திற்கு … Read more

#RIPVijayakanth : விஜயகாந்த்தின் இறுதி பயணம்… பிரபலங்கள் மரியாதை… 

RIPVijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது. நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் … Read more

விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கி நின்ற ஓபிஎஸ்.! அன்பு நண்பர்.. நல்ல தலைவர்…

Vijayakanth - O Panneerselvam

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, சினிமா , அரசியல் பிரபலங்கள் , தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். … Read more

மக்களிடையே தேசபக்தியை விதைத்தவர் விஜயகாந்த்.! அமித்ஷா இரங்கல்.! 

Union Minister Amit shah - Captain Vijayakanth

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல்  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.? கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் , பொதுமக்கள் என பலரும் இரங்கலை நேரிலும் … Read more

பாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Fathima beevi

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) உடல்நல குறைவு முதிர்வு காரணமாக இன்று காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி பாத்திமா பீவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். 1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டமும், பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் … Read more

“இதனை நினைத்துப் பார்க்கவே உள்ளம் அஞ்சி நடுங்குகிறது” – முதல்வர் இரங்கல்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் இன்று பலியாகியுள்ளார்.புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் தடுப்புச் சுவரில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,மகனை இழந்து வாடும் திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவிற்கு திமுகவினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும்,உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது என்று கூறி … Read more

உன்னை காணாது நான் இன்று நானில்லையே – கமல்ஹாசன் உருக்கம்..!

பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றுள்ள கதக் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து, தேசிய விருது பெற்றவர் தான் பண்டிட் பிர்ஜு மஹராஜ். 83 வயதுடைய இவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு … Read more

கேப்டன் வருண் சிங் தேசத்திற்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது – பிரதமர் இரங்கல்!

உயிரிழந்த கேப்டன் வருண் சிங் தேசத்திற்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள விமானப்படை … Read more

“முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா,மிகுந்த அனுபவமும்,அறிவாற்றலும் கொண்டவர்”- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சென்னை:முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் தமிழக ஆளுநரும்,ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார்.ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட 88 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் காலமானார். இதனையடுத்து,ரோசய்யா அவர்களின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்,பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஆந்திராவின் … Read more

மாயாவதியின் தாயார் மரணம் : நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரியங்கா காந்தி!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமாகிய மாயாவதி அவர்களின் தாய் ராம்ரதி அவர்கள் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்று மாயாவதியின் தாயாருக்கு இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், லக்னோவில் இருந்து மாயாவதி … Read more