முடிசூடா மன்னனாக இருந்தேன்.. பாஜகவால் தான் போச்சு..ஜெயக்குமார் குமுறல்..!

jayakumar

ஜெயக்குமார்:  பாஜகவால்தான் நான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என பாஜகவினர் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்” இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது, இல்லையென்றால் நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி … Read more

அண்ணாமலை என்ன ஜோசியரா? – செல்லூர் ராஜு பதிலடி

SELLUR RAJU

Sellur raju: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம். தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை காண்ட்ராக்ட் காரர்களுக்கு தாரை வார்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது. அதிமுக வேட்பாளர்களை பார்த்தாலே அது தெரியும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

தினகரன் கையில் அதிமுக இருந்தால் ..இன்று ஸ்டாலின் CM இல்லை ..! – அண்ணாமலை

Annamalai [file image]

Annamalai : அதிமுக கட்சி டிடிவி.தினகரனிடம் இருந்தால் ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால். தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக … Read more

500 நாட்களில் 100 வாக்குறுதிகள்.. கோவைக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Election Manifesto

Election Manifesto: கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அந்த தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு … Read more

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து… பிரதமர் மோடி உறுதி!

pm modi

PM Modi: ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

annamalai

Annamalai: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், திமுகவினர் காவல்துறையிடம் சென்று முறையிட்டனர். அதாவது நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டியுள்ளனர். இதன்பின், பாஜக – திமுகவினர் இடையே மோதல் … Read more

பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம்… முதலமைச்சர் ஸ்டாலின்!

mk stalin

MK Stalin: கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதலாவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக  வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும், மத்திய பாஜக அரசை விமர்சித்தும் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் … Read more

கோவையில் திமுக – பாஜக இடையே மோதல்! நடந்தது என்ன?

kovai

Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, … Read more

அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்குமா? – அதிமுக

semmalai

AIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்திருந்த இபிஎஸ்-ஐ நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார். பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள், தமிழ்நாடு … Read more

தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்கள்!

bjp

Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பித்தக்க இடங்களை … Read more