நாங்கள் தைரியமாக கூறுகிறோம்… அவர்களால் கூற முடியுமா.? தமிழக பாஜகவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி.!

annamalai and senthil balaji

திமுக உறுப்பினர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர் என்று நாங்கள் தைரியமாக கூறுவோம். அதே போல பாஜகவால் கூற முடியுமா.? – தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஈரோட்டில் செய்தியாளர்கள் அளித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜக பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பாஜக மீதான தனது விமர்சனத்தையும், தமிழக பாஜக மீது பல்வேறு கேள்விகளையும் கொடுத்தார். அவர் கூறுகையில், என்னிடம் பாஜக பற்றியும் … Read more

#Breaking : இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு.! அண்ணாமலை அறிவிப்பு.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு. இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் நன்றி. –  பாஜக அறிக்கை.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த தென்னரசு தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிற்க வைக்கப்பட்டு இருந்த செந்தில் முருகன் என்பவர் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு … Read more

பாஜக எம்எல்ஏ உறவினர் கார் விபத்து..! 2 பேர் பலி, 4 பேர் படுகாயம்..!

SUV hits vehicle

பெங்களூரு நிருபதுங்கா சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் மீது மோதியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் பெங்களூரில் உள்ள நிருபதுங்கா சாலையில் பாஜக எம்எல்ஏ உறவினரின் கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர். நிருபதுங்கா சாலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பாஜக எம்எல்ஏ எச் ஹலப்பாவின் உறவினரான ஓய்வு பெற்ற வன அலுவலர் ராமு சுரேஷிடம் பணிபுரியும் எம்.மோகன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அந்த … Read more

2023-24க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி கூறியது இதுதான்.! நிர்மலா சீதாராமன் பேட்டி.!

பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்பட கூடாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.   கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2024க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார். அதில் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, நர்சிங் கல்லூரிகள், இணையவழி நூலகம் , என பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார். இந்த பட்ஜெட் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை … Read more

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் என்பது என்ன.? அடுத்த ஆலோசனை பற்றிய முக்கிய விவரங்கள் இதோ…

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை வழங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது டெல்லியில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது.   2017, ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி கொள்கையான ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி என்பதை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் குழு எனும் ஒரு … Read more

இரட்டை இலைக்கு ஆதரவு.! ஓபிஎஸ் அறிவிப்பு.! பாஜகவின் ஒற்றுமை ஆலோசனை வெற்றி பெற்றதா.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இதுவரை நிகழந்த அடுத்தடுத்த நகர்வுகளை இந்த குறிப்பில் சுருக்கமாக காணலாம்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்புமாக அரங்கேறி வருகிறது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவின் தந்தையுமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்.! பாஜக நிர்வாகி சி.டி.ரவி பேட்டி.!

eps and ops annamalai bjp

திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம். – பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேச்சு.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . அதே போல ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த இரு சந்திப்புகளை அடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் … Read more

பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.! இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.!

ponnaiyan

வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், இபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமியை  அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து … Read more

பொது சிவில் சட்டம்… மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன.?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்பது பற்றியும், அதன் தற்போதைய நிலவரம் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.   பாஜக ஆட்சிக்கு வரும்போது அவர்கள் குறிப்பிட்ட முக்கிய சட்டங்களை ஒவ்வொன்றாக அப்போது நிறைவேற்றி வருகின்றனர். அதில் முக்கியமாக காஷ்மீரில் செயல்பாட்டில் இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு அடுத்ததாக சிஏஏ எனும் குடியுரிமை சட்டம்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பேசப்படும் சட்டம் என்றால் அது பொது சிவில் சட்டம் தான். பொது … Read more

கலைஞரின் நினைவாக பேனா சிலை.! ஜனநாயக குரலாக பேனா இருக்க வேண்டும்.! காயத்ரி ரகுராம் கருத்து.!

Gayathri Raghuram

மெரினாவில் அமைய உள்ள பேனா சிலை, வெறும் பேனா சிலையாக மட்டும் இல்லாமல், அனைவரும் வந்து பார்க்கக்கூடிய சுற்றுலா தலமாக இருக்க வேண்டும். – காயத்ரி ரகுராம் கருத்து.  மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னத்தை நிறுவ தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை பொருட்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக நேற்று கருத்து … Read more