பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

Annamalai: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.

மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், திமுகவினர் காவல்துறையிடம் சென்று முறையிட்டனர்.

அதாவது நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டியுள்ளனர். இதன்பின், பாஜக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் இந்த வன்முறையை காவல்துறையினர் தடுத்து அங்கிருந்து கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய பாஜகவினரி கைது செய்ய வேண்டும் எனவும் திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு திமுகவினர் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் தேர்தல் நடத்தை விதியை மீறி அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டது மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் புகாரும் அளிக்கப்பட்டது.  அந்த புகாரின் அடிப்படையில் பாஜகவினர் மாசாணி, ஆனநதன், லட்சுமி செந்தில், ரங்ககநாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளரான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரின் அடிப்படையில் அவர் மீது பீளமேடு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் விவகாரத்தில் ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலை மீது விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்