சதம் அடிக்கிற எண்ணமே இல்லை! மும்பையின் ஆக்ரோஷமான ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா!

ஐபிஎல் 2024 : பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை வெற்றிபெற்றது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது என்றே கூறலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 197 என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன், ரோஹித் இருவரும் இணைந்து நல்ல ஓப்பனிங்கை கொடுத்தனர். குறிப்பாக ரோஹித் மற்றும் இஷானின் அதிரடியில் மும்பை அணி 9-வது ஒவரிலேயே 100 ரன்களை கடந்தது.

அதனை தொடர்ந்து வந்த சூர்யா குமார் யாதவும் 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார்.  இதன் மூலம் மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழந்து 199 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மும்பையின் அதிரடியான ஆட்டத்தை பார்த்து சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி பேசி இருந்தார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ” இந்த போட்டியில் இஷான் கிஷன் மிகவும் அருமையாக விளையாடினார். அவர் தொடங்கி வைத்த அந்த அதிரடியான ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியினர் அனைவருமே பாலோவ் செய்தார்கள். ஒரு பக்கம் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்த நிலையில் மற்றோரு பக்கம் ரோஹித் சாந்தமாக விளையாடி கொண்டு இருந்தார்.

இஷான் கிஷன் ஆட்டமிழந்த பிறகு அடுத்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்து சிக்ஸர்களுக்கு பந்தை தெறிக்கவிட்டார். மும்பை அணியின் பேட்டிங்கை பார்க்கும்போது மிகவும் விறு விறுப்பாக இருந்தது. அணியில் யாரும் சதம் அடிக்க விரும்பவில்லை.  அணி வெற்றிபெறவேண்டும் நம்மளால முடிந்த அளவிற்கு எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ அடிப்போம் என்று வந்து வந்து அடித்தார்கள். இது தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.