Today Live : புயல் பாதிப்பு.! திமுக மாநாடு, கலைஞர் 100 நிகழ்ச்சி தேதிகள் ஒத்திவைப்பு.!

இன்று தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை சரியாக 7.39 மணி அளவில் பூமிக்கடியில் 10கிமீ தொலைவில் இந்த நில அதிர்வு உருவாகியுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவானது. அதே போல, கர்நாடக மாநிலம் விஜயபுரத்திலும் இதே போல நில அதிர்வு உணரப்பட்டது. அங்கு நில அதிர்வானது 3.1 என பதிவாகியுள்ளது. காலை 6.52 மணிக்கு … Read more

ஒடிசா அருகே வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்…! 5.1 ரிக்டர் அளவு பதிவு..!

வங்காள விரிகுடாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் திங்கள் கிழமை காலை 8.32 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. பூகம்பத்தின் ஆரம்பமானது கிழக்குப் பகுதியான புரி மற்றும் தென்கிழக்கு பகுதியான … Read more

இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்காத்தால் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 252 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 20 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து, பலி … Read more

Tsunami Warning : சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.  இன்று காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ஒருவர் பலி !

மெக்சிகோவில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. மிக பெரிய அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடர்பாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 400 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பதிவாகியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் கோலிமா என்ற … Read more

#Breaking : சீனாவில் சகதிவாய்ந்த நிலநடுக்கம்.! 21 பேர் உயிரிழப்பு.!  

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய பகுதியில் லூடிங் கவுண்டி பகுதியில் இன்று (திங்கள்) மதியம் 12.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியுள்ளது. இந்த இடர்பாடுகளில் சிக்கி பலர் பாதிப்பாடைந்துள்ளனர். இதுவரை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உள்ளது. இந்த நிலநடுக்கமானது மேலும் சில பகுதிகளில் … Read more

சீனாவில் நிலநடுக்கம், 7 பேர் பலி

சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நிலச்சரிவு கிராமப்புற நெடுஞ்சாலையை அடைத்துள்ளதாக நாட்டின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(செப் 2) மதியம் 12:43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் திக்லிபூரிலிருந்து 108 கிலோமீட்டர் வடக்கு-வடகிழக்கே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

#JUSTNOW : குஜராத் கட்ச் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “இன்று மதியம் 2.31 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மாவட்டத்தைத் தாக்கியது, அதன் மையம் ராபரில் இருந்து 13 கிமீ தென்-தென்மேற்கு (SSW) தொலைவில் இருந்தது” என்று காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்  7.3ஆக பதிவாகியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று (புதன்கிழமை ) காலை 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமனது பிளிபைன்ஸ் தலைநகர் மணிலா, உள்ளிட்ட சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. அதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.  … Read more