ஜப்பான் தீவில் நிலநடுக்கம்… 6.5 ரிக்டராக பதிவு.!

Japan Earthquake

Earthquake : ஜப்பானில் போனின் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் போனின் தீவு பகுதியில் இன்று (ஏப்ரல் 27) 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 503.2 கிமீ (312 மைல்) தூரம் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் தீவு பகுதியில் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைக்கு இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Ruang volcano

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount … Read more

Tsunami Warning : சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.  இன்று காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை: சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம் அமெரிக்காவின் அலாஸ்காவைத் தாக்கியது.!

பயங்கரமான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவின் அலாஸ்காவைத் தாக்கியது என்பதால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இன்று அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது. யு.எஸ்.ஜி.எஸ் படி, அலாஸ்காவின் பெர்ரிவில்லிலிருந்து 99 கி.மீ எஸ்.எஸ்.இ.யில் நிலநடுக்கம் தாக்கியது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலாஸ்கன் கடற்கரையோரங்களில் சுனாமி நடவடிக்கை ஏற்படும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது இதற்கிடையில் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டவுடன் … Read more

Breaking News:கடுமையான நிலநடுக்கம் எதிரொலி ! ஜப்பானில்  சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவு கோலில் 6.4 -ஆக நிலநடுக்கம் பதிவானது.கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து யமகட்டா,நிகாட்டா, இஷிகாவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு ஊடகங்கள் கடற்கரை பகுதிகளில், பெரிய அளவில் அலைகள் வரத்துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பூகம்பத்தினால், ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.   … Read more