Tsunami Warning : சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு. 

இன்று காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment