அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(செப் 2) மதியம் 12:43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் திக்லிபூரிலிருந்து 108 கிலோமீட்டர் வடக்கு-வடகிழக்கே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment