விவசாயத்தை வாழ வைக்க நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்…! – சீமான்

விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டுக்கும், … Read more

உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா…? – சீமான்

உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் … Read more

“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” – சீமான் கண்டனம்..!

மனிதத்தைக் கொன்று மதத்தை வளர்க்கத் துடிக்கும் பேராபத்துமிக்க பாஜக அரசின் அநீதிக்கெதிரான நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான … Read more

“அன்புத்தம்பி பேரறிவாளன் சிறைவிடுப்பை முதல்வர் நீட்டிக்க வேண்டும்” – சீமான் கோரிக்கை..!

பேரறிவாளன் சிறை விடுப்பை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது  தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் … Read more

“முருகேசன்-கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது”- சீமான் வரவேற்பு..!

மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் முருகேசன்-கண்ணகி ஆணவப்படுகொலை தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில், உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கில் தொடர்புடைய … Read more

“அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் & பொறியியல் படிப்புகளில் 2.5% இட ஒதுக்கீடு” – சீமான் வலியுறுத்தல்..!

மத்திய அரசினால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் நுழைவுத்தேர்வுகளினால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களது மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கனவுகள் கானல் நீராகும் பேராபத்து ஏற்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்;நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும்,உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.வரும் 22 ஆம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள … Read more

“தனித்துப்போட்டி..நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை” – சீமான்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்றவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இது ஒரு போதும் வீண் போகாது: “என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!கடந்த சட்டமன்ற தேர்தல் 2021, … Read more

“தமிழ்ப்பிள்ளைகளின் இரத்தம் குடிக்கும் பாஜக;வேரடி மண்ணோடு பிடுங்க வேண்டும்” – சீமான் ஆவேசம்..!

மோடி அரசின் மக்கள் விரோதமும், திராவிட அரசுகளின் பொய் வாக்குறுதியுமே ‘நீட்’ தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுசின் உயிர்ப்பலிக்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: நெஞ்சம் குமுறும் எளிய மகனாய் அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்: நீட்’ தேர்வு அச்சத்தில் சேலம், மேட்டூரையடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தனுஷ் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். ஏற்கனவே, தங்கை அனிதா உள்ளிட்ட 13 பச்சிளம் பிள்ளைகள் … Read more

“புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும்,எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர்” – சீமான்…!

இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும், எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியருமான புலமைபித்தன்(86) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புகழ்பெற்ற கவிஞர்,திரைப்பாடலாசிரியர்,பேரவைப் புலவர்,மூத்த அரசியல்வாதி, எனப் பன்முக ஆளுமை கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன் … Read more