பேரறிஞர் அண்ணா வேறு.. சீமான் வேறு.! என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்.! சீமான் பேட்டி.!

பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். –  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே போல அதிமுக சார்பாக அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், … Read more

அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கியப்புள்ளி..!

diliban

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்த பேராவூரணி திலீபன் அதிமுகவில் இணைந்தார்.  நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் பேராவூரணி திலீபன். இவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் துப்பட்டி பழனிசாமி முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்த பேராவூரணி திலீபன் அதிமுகவில் இணைந்துள்ளார்.

இவரு அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறி விடும் – சீமான்

seeman 1

அதிமுக பாஜக காலடியில் நிற்காது, பாஜக தான் மற்றவர்கள் காலடியில் நிற்கும் என்று சீமான் பேட்டி.  2017-ல் சேலம் பொது கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமானிடம், உதயநிதி அமைச்சரானால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி முதலமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக … Read more

தமிழ்நாட்டில் இந்தியை கொண்டாட நினைத்தால் அது முடியாது – சீமான்

seeman 1

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள் என சீமான் பேச்சு.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று சென்னை எழும்பூரில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டமானது கொட்டும் மழையில் நடைபெற்றது. அந்த மழையிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அவர் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். இந்தி மொழியை எதிர்த்து இந்த போராட்டம் … Read more

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி..!

SEEMAN

இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.  நவம்பர் 01 – தமிழ்நாடு நாளான இன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து, மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்ததாவுல்லாது. நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமென சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

காவல்துறையின் மீதே நம்பிக்கையை இழந்துவிட்டாரா முதல்வர்? – சீமான்

seeman 1

தேசியப்புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற இலட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு என சீமான் அறிக்கை.  கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி,  தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு … Read more

தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது – சீமான்

seeman

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய என சீமான் வலியுறுத்தல்.  நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்தும் மீன்பிடித்த காரணத்தால், காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் … Read more

தமிழக அரசின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும் – சீமான்

seeman

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள … Read more

தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

seeman

இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என சீமான் அறிக்கை.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து … Read more

அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான்

seeman

அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் … Read more