இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Ma.subramaniyan

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது . வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை  சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ … Read more

பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – துரை வைகோ

Durai vaiko

சேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆளுநரின் செயல்பாடு உள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்! சங்கரய்யா ஒரு விடுதலை … Read more

4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் என்ன பேசினார் என்றால் ”லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம்” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார். அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ”சமீபத்தில் மன்சூர் அலி … Read more

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி பேட்டி.  டெல்லியில் இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க  திட்டமிட்டுள்ளனர். இந்த, பிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற … Read more

நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது – எச்.ராஜா

நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.  பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செய்தியாளர்களுக்கு எதிராக … Read more

உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா…? – சீமான்

உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் … Read more

பத்திரபதிவில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை -அமைச்சர் மூர்த்தி

பத்திரபதிவில் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த … Read more

பள்ளிகள் திறந்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தவறான கருத்து – அமைச்சர் சுப்பிரமணியன்

பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கைக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அவர் … Read more

அனைத்து கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் – அமைச்சர் பொன்முடி

செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் … Read more

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை…! – முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் நான் முழு மனதுடன் வரவேற்பேன். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,இன்று வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் … Read more