பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – துரை வைகோ

Durai vaiko

சேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆளுநரின் செயல்பாடு உள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்! சங்கரய்யா ஒரு விடுதலை … Read more

ராஜேந்திர சோழன் போர் கப்பல் போல் மதிமுக உருமாறும் – துரை வைகோ

நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து சாதனை படைப்போம் என மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ தகவல். என் இறுதி மூச்சு உள்ள வரை இந்த இயக்கத்திற்காகவும், இயக்க தோழர்களுக்காகவும் போராடுவேன் என்று மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். எங்கள் வாக்கு வங்கி சரிந்திருக்கலாம் ஆனால், நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து சாதனை படைப்போம். ராஜேந்திர சோழன் போர் கப்பல் போல் மதிமுக உருமாறும் நாள் வெகு தொலைவில் … Read more

மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் – வைகோ அறிவிப்பு!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,மதிமுகவில் துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் 3 மாவட்ட செயலாளர்களும் … Read more

மின்வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் – துரை வைகோ!

மின்சார வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது, மின்சார வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.