புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு!

சட்டவிரோதமாக புதிய படங்களை பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையத் தளங்கள் மீது முதல் முறையாக வழக்குப் பதிவு..!புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு

தேர்வுக்கட்டணம் ரூ.100ஐ செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும்! டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அறிவிப்பு ..

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தேர்வுக்கட்டணம் ரூ.100ஐ செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.13 கடைசிநாள், தேர்வுக் கட்டணம் செலுத்த டிச.15 கடைசிநாள் – டிஎன்பிஎஸ்சி

குமரியில் மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், ‘ஓகி’ புயலில் சிக்கி காணாமல் போன மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஓகி’ புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீனவர்களின் போராட்டம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், புயலில் சிக்கி மாயமான … Read more

காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்!தினகரன் அதிரடி ….

பணம் விநியோகிப்பதாக என்னுடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்; காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்.அனுமதித்த நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்படுகிறது; விதிமீறல்கள் எதுவும் நடக்கவில்லை.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன் – டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகரில் தேர்தல் நடந்தால் நியாயமாக நடைபெற வேண்டும்!

தேர்தல் நடந்தால் நியாயமாக நடைபெற வேண்டும், இல்லையேல் தேர்தல் நடத்துவது வீண். தேர்தல் விதிமீறல் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின் தமிழிசை பேட்டி.

வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட் அவுட்கள் வைக்க அனுமதிப்பதா?உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி….

கட் அவுட், பேனர் வைக்க அனுமதிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது- உயர்நீதிமன்றம் வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட் அவுட்கள் வைக்க அனுமதிப்பதா?- நீதிபதி கேள்வி.

இளைய தளபதி விஜய் சத்யா படக்குழுவுக்கு வாழ்த்து!ரசிகனுக்கு இதை விட என்ன தேவை மகிழ்சியில் சிபிராஜ் …

சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் சத்யா.இந்த படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,வரலட்சுமி ,சதீஷ் நடித்துள்ளனர்.இந்த வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இளைய தளபதி விஜய் நடிகர் சிபிராஜ்க்கு போன் செய்து படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.ஒரு ரசிகனுக்கு இதை விட சந்தோசம் என்ன என்று வெளியிட்டுள்ளார் . இதனால் மொத்த  படகுழுவும் மிகுந்த சந்தோஷத்தில் … Read more

திருவள்ளூரில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக திருவள்ளூர் மாவட்டத்தில்  பழவேற்காடு பகுதியில் 40 கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி அருகே மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே இறவிபுத்தன்துறையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி   கண்ணை கட்டி போராட்டம்.

ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை உயர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் விசாரணை. ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார். மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகரன் கூறியுள்ளார். மருத்துவர், மருத்துவமனை கண்காணிப்பாளர், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது – இன்பசேகரன்