அமைச்சரின் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்!

விழுப்புரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின்  அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வெளியானது சிம்பு -வெங்கட் பிரபு கூட்டணியின் படத் தலைப்பு!அரசியல் டைட்டிலுடன் களமிறங்கிய சிம்பு ..!

நடிகர்  சிலம்பரசன்  அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.  சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு – சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் -வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு “மாநாடு” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதை அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் … Read more

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவு!

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து ஏற்கனவே 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் நிலையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு!உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு கோரிய வழக்கை முடித்து வைத்தது  உயர் நீதிமன்ற மதுரை கிளை. கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு … Read more

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு இனிய செய்தி ..!கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை , நீட் தேர்வில் பிழையான ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் வழங்க சிபிஎஸ்இ க்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார். பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம்,  தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க … Read more

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தையும்,கார்த்தி சிதம்பரத்தையும் ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை!

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழக்கு இது தொடர்பாக தொடர்ந்தது.ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை … Read more

மும்பையை விடாது துரத்தும் கனமழை..!மக்களின் இயல்பு வாழ்கை இன்றும் பாதிப்பு!

மகாராஸ்டிரா மாநிலத்தில் மீண்டும் மழையின் விஸ்வரூபம் தொடங்கியுள்ளது.கடந்த ஒருவாரமாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது. இன்று மும்பையில் உள்ள தானே பகுதியில் காலை முதலே கனமழை பெய்து வருகின்றது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். முன்னதாக இந்தியாவில் அதிக மழைப் பொழிவை தரும் தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருகிறது என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது. மேலும் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் … Read more

தமிழகத்தில் அமித் ஷா வருகையால் மழை பெய்துள்ளது!இதனால் தாமரை தானாக மலரும்!தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் அமித் ஷா வருகையால் மழை பெய்துள்ளது என்று தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த மழையால் குளங்கள் நிரம்பும். குளங்கள் நிரம்பினால் தாமரை தானாக மலரும் என்றும் கூறியுள்ளார். நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எனக்கு அதிகாரம் இல்லை என கூறுபவர்கள் முதலில் இதை செய்யுங்கள்!துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

சமீப காலமாக புதுச்சேரி முதல்வர் -துணை நிலை ஆளுநர் இடையே அதிகாரப்  போட்டி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து ஒன்றை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனக்கு அதிகாரம் இல்லை என கூறுபவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும்.யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரோகித் சர்மாவிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்ட தினேஷ் கார்த்திக்!ஆமா அவங்க இருக்கணும்..! கலங்கிய ரோகித் ..!

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் … Read more