கன மழையால் வழுக்கும் சாலையில் சறுக்கி செல்லும் பேருந்து வைரலாகும் வீடியோ

பெங்களூரில் கன மழைக்கு மத்தியில் வழுக்கும் சாலையில் சறுக்கிய வோல்வோ பேருந்து. கனமழைக்கு மத்தியில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் வால்வோ பேருந்து கட்டுப்பாடின்றி சறுக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு டிரக் விபத்துக்குள்ளாகி கிடக்கும் நிலையில், பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சறுக்குவதைக் இந்த வீடியோவில் காணலாம். கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். When u travel in B’lore🔄Mysore new highway Road make … Read more

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக பல மாநிலங்களில் ஐடி ரெய்டு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஐடி ரெய்டு. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) மற்றும் அவற்றின் சந்தேகத்திற்குரிய நிதியுதவிக்கு எதிரான வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை இன்று(செப் 7) பல மாநிலங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் … Read more

உத்திர பிரதேசத்தில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 7 வயது தலித் சிறுவன்

உத்திர பிரதேசத்தில், 2 ஆம் வகுப்பு தலித் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்து துன்புறுத்திய ஆசிரியர். உத்திரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று(செப் 6) 2 ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது தலித் மாணவனை ஆசிரியர் அடித்ததாகவும், மாணவனின் தலையை தரையில் தேய்த்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் வலது கண்ணுக்கு அருகில் காயம் … Read more

ஆர்டர் செய்த சிக்கன் விங்ஸ்க்கு பதிலாக எலும்புகள்! வைரலாகும் வீடியோ

ஒருவர் ஆர்டர் செய்த சிக்கன் விங்ஸ்க்கு பதிலாக எலும்புகள் மற்றும் அதனுடன் ஒரு கடிதத்தை பெறும் வைரல் வீடியோ. டேமியன் சாண்டர்ஸ் என்பவர் உணவு டெலிவரியில் ஆர்டெர் செய்த உணவிற்கு பதிலாக எலும்புகள் மற்றும் டெலிவரி பாய் எழுதிய ஒரு லெட்டர் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். டெலிவரி பாய் எழுதிய கடிதத்தில், தான் பசியில் இருந்ததாகவும், பணம் ஏதும் இல்லாத காரணத்தால் உங்களின் உணவை தான் சாப்பிட்டுவிட்டதாக எழுதியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் … Read more

சொத்துக்காக பாட்டியைக் கொன்ற பேரன்!

புனேயில் சொத்துக்காக பாட்டியைக் கொன்று உடல் உறுப்புகளை ஆற்றில் வீசிய பேரன். புனேயில் சொத்து தகராறு காரணமாக குட்டு கெய்க்வாட் (20) என்பவர் தனது 62 வயது பாட்டியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸார் நேற்று(செப் 6) தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட குட்டு கெய்க்வாட், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வீடு மற்றும் சில தங்க ஆபரணங்களை தனது பேரனுக்கு … Read more

மாமியாரின் விரல்களை கடித்த மருமகள்!!

டிவியின் சத்தத்தை குறைக்கும் சண்டையில் மாமியாரின் விரல்களை கடித்த மருமகள். தானேவில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளால் தனது வலது கையின் மூன்று விரல்களை கடித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இச்சம்பவம் திங்கட்கிழமை(செப் 5) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது மாமியார் தனது மருமகளிடம் டிவியின் ஒலியைக் குறைக்கச் சொன்னதாகவும் மருமகள் அவர் மறுத்துவிட்டதால்,  கோபமடைந்த மாமியார் டிவியை அணைத்துள்ளார், அதையடுத்து  மாமியார் மற்றும் மகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாமியாரின் விரல்களை மருமகள் … Read more

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! தமிழகத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்தது

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்தது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்தது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 குறைந்தது, ஒரு சவரன் ரூ.37560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் … Read more

கர்நாடக வனத்துறை அமைச்சர் மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் காலமானார். கர்நாடக வனம் மற்றும் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் நேற்று(செப் 6) காலமானார். உமேஷ் கட்டி தனது டாலர்ஸ் காலனி வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து, பெங்களூரு ராமையா மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார், இது மாநிலத்திற்கு மிகப்பெரிய … Read more

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ளாமல் கவனமாக செயல் பட வேண்டும். ரிஷபம்: இன்று உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்களின் நட்பு பட்டியலில் கூடுதல் நண்பர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. மிதுனம்: உங்கள் திறமைகளை நிரூபித்து சிறப்பாக வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். கடகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண போராட வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் மனம் அமைதி பெறும். சிம்மம்: உங்கள் நம்பிக்கையை வளர்த்து கொள்வதன் … Read more

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் நாளை வெளியாகிறது

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் ஒரு பெரிய 48MP கேமராவுடன் நாளை அறிமுகமாகிறது. நாளை வெளியாக இருக்கும் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் மீது தற்போது அனைவரின் பார்வையும் உள்ள நிலையில், இந்த முறை ஐபோன் 14 சீரிஸ் ஐபோன் 13 உடன் ஒப்பிடும்போது அதிக மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும்ஐபோன் 14 மேக்ஸ் ஆகியவை 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் ப்ரோமோஷன் (120Hz) டிஸ்ப்ளேக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. … Read more