அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்..! பீதியடைந்த மாணவர்கள்..!

தானேவில் உள்ள பள்ளியில் ஆசிரியருக்கான லிப்டில் சென்ற மாணவர்களில் இரண்டு பேர் பீதியடைந்தனர். வெள்ளிக்கிழமை, தானேவின்  பொக்ரான் சாலையில் உள்ள சுலோச்னாதேவி சிங்கானியா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவர்கள், குமார் ஷௌனக் தக்லே, குமார் ஷ்ரேயாஸ் பட்குஜர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை PET வகுப்பு முடிந்த நிலையில் அடுத்த வகுப்பிற்கு செல்வதற்காக ஆசிரியர்களுக்கான லிப்ட்டில் சென்றுள்ளனர். இவர்களோடு 5 முதல் 6 மாணவர்கள் உடன் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற லிப்ட்டானது அதிக … Read more

தானேயில் ரயில்வே சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு ,4 பேர் காயம்

தானேவின் டோம்பிவிலி ரயில் நிலைய வளாகத்தில் புதன்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரயில் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க புதிய பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், திடீரென அருகில் இருந்த பழமையான சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள் 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மற்ற ரயில்வே … Read more

மாமியாரின் விரல்களை கடித்த மருமகள்!!

டிவியின் சத்தத்தை குறைக்கும் சண்டையில் மாமியாரின் விரல்களை கடித்த மருமகள். தானேவில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளால் தனது வலது கையின் மூன்று விரல்களை கடித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இச்சம்பவம் திங்கட்கிழமை(செப் 5) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது மாமியார் தனது மருமகளிடம் டிவியின் ஒலியைக் குறைக்கச் சொன்னதாகவும் மருமகள் அவர் மறுத்துவிட்டதால்,  கோபமடைந்த மாமியார் டிவியை அணைத்துள்ளார், அதையடுத்து  மாமியார் மற்றும் மகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாமியாரின் விரல்களை மருமகள் … Read more

இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் 2,000லிருந்து10,000 ஆக உயர்வு..!

தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்தது. அதன்படி கிட்டத்தட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் அரசுகள் தங்கள் விருப்பப்படி இந்தத் திருத்தங்களைச் செய்தனர். ஆனால், மகாராஷ்டிர அரசு இந்தத் திருத்தங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டு ஜனவரியில் முதல்  மகாராஷ்டிராவில் திருத்தங்கள் விரைவில் … Read more

தானேவில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது..!

மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். 42 வயதான அந்த நபரை நேற்று கைது செய்யப்பட்டதாக ஹில் லைன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் விளையாடுவதாக கூறி அந்த சிறுமியை தனது … Read more

கனமழை காரணமாக மும்பையில் நாளை ‘ரெட் அலர்ட்’..!

பருவமழை தீவிரமடைந்து வருவதால் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று மும்பையில் பருவமழை தொடங்கியது. முதல் நாள் பெய்த கனமழை காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளம் போல் காட்சியளித்தது. சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மும்பை நகரில் நேற்று காலை மிதமான மழையே பெய்துள்ளது. … Read more

மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை..! 4 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட்  ஆகிய 4 நகரங்களில் இன்று மிக … Read more

தானே மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு.!

தானே மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு 3 -ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. ஆனாலும், கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட … Read more

புனேவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட மதவாத சக்திகள்…!

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள ” *பீமா கோரேகான்”* போர் நினைவுசின்னம் 200வது ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி போன்ற தலித் தலைவர்கள் பங்கேற்று பாஜக தலைவர்களின் அரசியலமைப்பு மாற்றம் குறித்த கருத்துக்களை எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இதனை பொறுத்துகொள்ள முடியாத ஆளும் மதவாத சக்திகள் இன்று 01-01-2018 வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு … Read more