பள்ளிக்கு வராத மாணவன்..! மாணவனின் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்திய ஆசிரியர்!

குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்.  தெலுங்கானாவில் நவீன் என்ற மாணவன் வீட்டு வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை அறிந்த ஆசிரியர் பிரவீன் மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி மாணவனை மீண்டும் படிக்க வருமாறு அழைத்துள்ளளார்.  பள்ளிக்கு வராதா மாணவனின் வீடு தேடி சென்று பள்ளிக்கு வருமாறு அழைத்த ஆசிரியருக்கு  பலரும் … Read more

மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியை பணியிடமாற்றம் ..!

மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியையை  பணியிடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு. திருப்பூர் மாவட்டம் காரதொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் அந்த பள்ளியில் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது மகனிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவியை மருமகள் என உறவுமுறை கூறி அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து, தனது மகனிடம் பேசவில்லை என்றால், மதிப்பெண்ணில் கைவைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையயடுத்து, இது தொடர்பாக மாணவி … Read more

ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலாகும் வீடியோ!!

தன் பள்ளி ஆசிரியையை கட்டிப்பிடித்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலான வீடியோ!! ஒரு சிறுவன் தான் செய்த தவறுக்காக தனது வகுப்பு ஆசிரியரிடம் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சிறுவன் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறான், ஆனால் ஆசிரியர் ஏற்க மறுக்கிறார் சிறிது விவாதத்திற்கு பிறகு ஆசிரிரை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும்  சமாதானபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் … Read more

உத்திர பிரதேசத்தில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 7 வயது தலித் சிறுவன்

உத்திர பிரதேசத்தில், 2 ஆம் வகுப்பு தலித் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்து துன்புறுத்திய ஆசிரியர். உத்திரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று(செப் 6) 2 ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது தலித் மாணவனை ஆசிரியர் அடித்ததாகவும், மாணவனின் தலையை தரையில் தேய்த்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் வலது கண்ணுக்கு அருகில் காயம் … Read more

டாக்.ராதாகிருஷ்ணன் விருது – புதிய நடைமுறைகள் வெளியீடு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது என அறிவுறுத்தல்.  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது அதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு  டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது. அரசியல் தொடர்பில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய … Read more

13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.  அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் அறிவுறுத்தலை திறந்து திருத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்,  … Read more

தற்காலிக ஆசிரியர் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. … Read more

குட்நியூஸ்…3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு;ஊதியம்,இதர படிகள்- பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் … Read more

#BREAKING: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அப்பள்ளி ஆசிரியர் ராமராஜ்யை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தந்த புகாரில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வலவனை காவல்துறையினர் தேடி வருகின்றன. மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும், இரட்டை … Read more

கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் …!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், மாணவி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் … Read more