பட்டாக்கத்தியால் கைவிரல்களை வெட்டிய கல்லூரி மாணவர்..!

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் தன்னை செல்வாக்கு மிகுந்தவர் போன்று காட்டிக் கொண்டு வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற மாணவர்கள் கார்த்திக்கிற்கு அதிக அளவில் மரியாதை கொடுத்து வந்தனர். அதே கல்லூரியில், அவருடன் பயின்று வரும் மாணவர், அஸ்வின். இவர் கார்த்திக்கை உதாசீனப்படுத்திய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வாய்த்தகராறு பெரியதாகி, கல்லூரி முடிந்ததும் … Read more

தந்தை முன்னே நடந்த கோர சம்பவம்.. 17 வயது பெண் மீது தீவைத்த காதலன்..!

கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவர் அங்குள்ள காக்க நாடு பகுதியை சேர்ந்த 17 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் அந்தப் பெண்ணிடம் பலமுறை தனது காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு நிதின் சென்றார். வீட்டில் இருந்து வெளியே வந்த அவரின் தந்தையிடம் அப்பெண்ணைப் பார்க்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து வெளியே வந்த அந்தப் பெண் … Read more

தலைவன் இருக்கிறன் படத்திற்கு பிறகு இசைப்புயலை அனைவரும் பாராட்டுவர்! – கமலஹாசன் பெருமிதம்!

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்கி, அதில் அவரே நடித்து, அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும் இதுகுறித்து கமல் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், “இந்த படத்தில் இரண்டு பாடல்கள் முடிவடைந்து விட்டது. இப்பட ரிலீசிற்கு பிறகு A.R.ரஹ்மானின் இசைக்கூறித்தே அனைவரும் பேசுவார்கள்’ என பெருமையாக கூறினார்.

"சூரைப்போற்று" படத்திற்காக பிஸியாக இயங்கிவரும் G.V.பிரகாஷ்..!

தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படம், காப்பான். இந்த படத்தை தொடர்ந்து, இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வரும் சூரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தீவிரமாக G.V.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும், இது அவருக்கு 70ஆவது படம். டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசைசேர்ப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு … Read more

சூப்பர்ஸ்டாரை சந்தித்த ராகவா லாரன்ஸ்..!

நடிப்பு, நடனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நடனஆசிரியர், ராகவ லாரன்ஸ். நடிப்பு மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான அணைத்து செலவுகளையும் செய்து வந்தார். இன்னலையில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரிடமும் அவர மனைவி லதா ரஜினிகாந்திடமும் ஆசிபெற்றார். அந்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

"கெக்க புக்க" படத்தின் தழுவலா ஹிப் ஹாப் ஆதியின் "நான் சிரித்தால்" படம்..?

“மீசைய முறுக்கு” எனும் படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்ததால், அடுத்த “நட்பே துணை” என்ற படத்தை எடுத்தார். இந்த படங்களை சுந்தர் சி தயாரித்துள்ளார். இந்த வெற்றிகளை தொடர்ந்து, இயக்குனர் ராணா இயக்கி வரும் “நான் சிரித்தால்” என்ற படடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த … Read more

தீபாவளியை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக உள்ள தமிழ்படங்கள்! பிகில் – சங்கத்தமிழன் – கைதி ரிலீஸ் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் தற்பொழுது அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து துள்ளார். இந்த படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. அதேபோல விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசிகன்னா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ஸ்கெட்ச் பட … Read more

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் ரபேல் விமானத்தில் பறந்த மத்திய அமைச்சர்..!

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில்  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. இந்த போர்விமானம், விஜயதசமி மற்றும் விமானப்படை நாளான இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் முதலாக பெற்ற ரபேல் விமானத்தில் ஒரு ரவுண்டு பறந்து வந்தார்.  

பஞ்சாபில் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்..!

பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரீல் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று இரவு 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, ரோந்து பணிகள் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் போலீசார், உளவுத் துறையினர் மற்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், அந்த விமானங்கள் மூலம் ஆயுதக் கடத்தல் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் … Read more

"நீ பெரியாலா, நா பெரியாலா" ட்விட்டரில் சண்டையிடும் தல-தளபதி ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. மேலும், இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் #Whistle என்ற ஹஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம், தல 60. இந்நிலையில், தல அஜித்தின் புதிய கெட்டப்புடன் விமான … Read more