கே.வி.ஆனந்த் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – ரஜினி காந்த..!!

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். 

சமீப நாட்களாக திரையுலகில் பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது திரையுலகை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிக

ந்த் ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் ” மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் நீக்கிய பதிவிற்கு பதிலளித்துள்ள ரஜினி.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த்  கொரோனா மற்றும் ஊடரங்கு குறித்து ஒரு வீடியோவை நேற்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

ரஜினி வெளியிட்ட அந்த வீடியோவானது, தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியது. இந்நிலையில், நீக்கப்பட்ட அந்த பதிவு குறித்து ரஜினி ட்விட்டரில் கூறியதாவது, “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 -14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால் அது, “இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது என கூறினார்.

தமிழகம் தான் ரஜினிக்கு நன்றி சொல்லவேண்டும்.! துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் பதிவு.!

  • துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும், கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தார்.
  • துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது என்று கூறி, தமிழகம் தான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த 50-வது ஆண்டு துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசுகையில் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார். இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், நேற்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி ஆதித் தமிழர் கட்சியினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் எதிர்ப்பை காட்டினர். பின்னர் அவர்களை காவல்துறை கைது செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் இன்று பேட்டி ஒன்று அளித்தார், அதில் துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை. 1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும், கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், மறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல, மறக்கப்பட வேண்டிய ஒன்று என கூறினார். மேலும் அவங்க பார்த்தை அவங்க சொன்னாங்க, நான் கேள்விப்பட்டத நான் சொன்னேன். ராமர், சீதை ஆடையில்லாமல் ஊர்வலம் எடுத்து சென்றதாக Outlook india என்ற செய்தித்தாளில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியின் இன்டர்வியூ நடந்துகொண்டிருக்கிறது, பாருங்கள் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவுப்படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் அவருக்கு தான் தமிழகம் நன்றி செலுத்த வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.

ஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் !

2018ம் ஆண்டு தமிழகத்தில் காஜா புயல் தாக்கியது. இதில் பலர் தங்களது வீட்டை இழந்தனர். புயலில் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு கட்டித் தருவதாக ரஜினி மக்கள் மன்றம் உறுதியளித்தனர். அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகள் கட்டப்பட்டது. காஜா புயலில் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீட்டின் சாவிகளை ரஜினி காந்த் வழங்கி சிறப்பித்துள்ளார்.

 

சூப்பர்ஸ்டாரை சந்தித்த ராகவா லாரன்ஸ்..!

நடிப்பு, நடனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நடனஆசிரியர், ராகவ லாரன்ஸ். நடிப்பு மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான அணைத்து செலவுகளையும் செய்து வந்தார்.
இன்னலையில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரிடமும் அவர மனைவி லதா ரஜினிகாந்திடமும் ஆசிபெற்றார். அந்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
Image

வாக்களிக்காதது எனக்கும் வருத்தம் தான்! நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்!

கடந்த 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பாண்டவ அணியினர் மற்றும் சங்கரதாஸ் அணியினர் என இரு அணிகளும் பங்கேற்றனர். பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்கள் வந்து கலந்துகொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இந்நிலையில், இந்த நடிகர் சங்க தேர்தலுக்கு ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வரவில்லை. இதையடுத்து, பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் வெள்ளம் வருவதற்கு முன்பு அணையை கட்ட வேண்டும் என்றும், நடிகர் சங்க தேர்தலில், நான் வாக்களிக்க வராதது எனக்கும் வருத்தத்தை தான் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நாளை வெளியாகிறது 2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ…!அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு …!

2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று  படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக  இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதேபோல் இதன் மேக்கிங் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று  படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஜினியின் மற்றொரு முகம் இதோ….

ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று கேள்வி எழுப்பிவந்த ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் அரசியலுக்கு வருவேன் என்று பதில் அளித்தபின்னர் அவர் சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார் ஒக்கி புயல் முதல் உஷா ,அஷ்வினி படுகொலை வரை அவர் மௌனம் களைய வில்லை .ரசிகர்களை பார்ப்பது அடுத்த கட்ட அரசியல் பற்றி பேசுவது சிலையை திறந்து வைப்பது என அரசியல் வேலையாக செய்து வருகிறார்.

இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் ரஜினிகாந்திடம், சமீபத்தில் அரங்கேறிய பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளை பற்றி கேள்விகளுக்கு அவர் உஷா மற்றும் அஷ்வினி படுகொலை குறித்து கருத்து கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல் மௌனமாக சென்றார்.

ரஜினியின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாகவும் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் இதுதான் நடக்கும் என்று சமுக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் ரஜினி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரஜினி ,கமல் குறித்து விஷால் அதிரடி கருத்து !

நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கூறியதில் , காவிரி பிரச்னையில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என தயாரிப்பாளர் சங்கத் தலைவரும்,  கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திண்டுகல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டால் நல்லது எனவும், அதனை கர்நாடக அரசு மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றார்.

காவிரி நதி நீர் பிரச்னையில் நடிகர்கள் ரஜினி, கமல் தமிழகத்திற்காக குரல் கொடுத்தால் நல்லது என்றும் விஷால் கூறினார். ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.