இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு ஓபிஎஸ் கண்டனம்.  தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்வத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த … Read more

லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் … Read more

#BREAKING : 13 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை..!

உச்சநீதிமன்றத்தில் 32 நீதிபதி உள்ள நிலையில் 13 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றால், அரசியல்,  சினிமா பிரபலங்கள் மற்றும் காவலர்கள், நீதிபதிகள் என முக்கியமானவர்கள் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் கொரோனா தொற்றால் … Read more

#BREAKING : தமிழகத்தில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை – தமிழக அரசு

இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி.  சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய … Read more

அன்னை தமிழை காக்க எந்த தியாகத்தையும் செய்ய நாம் உறுதியேற்போம்! – டாக்.ராமதாஸ்

மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும் என ராமதாஸ் ட்வீட்.  இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில், தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.  அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்மொழியாம் தமிழை அழிக்கும் … Read more

இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

நாளை நாடுமுழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், டிடிவி தினகரன் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் நாளை குடியரசுதினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், யுடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய … Read more

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி..!

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்களி சிறப்பாக நடத்தி முடிக்க, தேசிய தேர்தல் ஆணையம் மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக … Read more

‘2022 தொடங்கிவிட்டது’ – சமுதாய ரீதியாக கணக்கெடுத்து தொகுதி ஒதுக்கீடு செய்திடுக – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியை சேர்ந்த காமராஜ் என்ற சின்னதுரை மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை  ஊராட்சி ஒன்றியம் நகராட்சியாக மாற்றப்பட்டது.  மானாமதுரை நகராட்சியில் பட்டியலின மக்கள் 5,760 பேர் உள்ளனர். ஆனால், … Read more

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்..!

தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர்  ஈடுபட்டனர். தமிழகத்தை ஆளுகின்ற … Read more