அன்னை தமிழை காக்க எந்த தியாகத்தையும் செய்ய நாம் உறுதியேற்போம்! – டாக்.ராமதாஸ்

மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும் என ராமதாஸ் ட்வீட். 

இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில், தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். 

அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்மொழியாம் தமிழை அழிக்கும் நோக்குடன் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து பல கட்டங்களில் போராடி உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும்!

அன்னை மொழியைக் காக்கும் போராட்டத்தில் சிறைபட்டு,வாட்டி வதைத்த நோய்க்கு மருத்துவம் பெறாமலும், தங்கள் உடலை தாங்களே ’தீ’க்கு பலி கொடுத்தும் மொழிப்போர் வீரர்கள் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றவை. அவற்றை எந்த நாளிலும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

இந்தியையும்,சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றுக்கு எதிரான நமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அன்னை தமிழை காக்க எந்த தியாகத்தையும் செய்ய நாம் உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.