ஆர்.எஸ்.எஸ்-பாஜக, சமத்துவத்திற்கு சமாதி கட்டும் ஒரு கொடும் காலத்தில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு – ஜோதிமணி எம்.பி

அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணல் … Read more

ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம் – சு.வெங்கடேசன் எம்.பி

இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது என ஆளுநரின் தேநீர் விருந்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக … Read more

தவறு நடந்தால் வேடிக்கை பார்க்க முடியாது – காவல்துறை

மசாஜ் நிலையங்களில் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என காவல்துறை தரப்பில் விளக்கம் உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.  சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாசாஜ் நிலைய உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு .தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்…! அமைச்சர் அன்பில் மகேஷிற்கு சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்..!

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அமைச்சர் அன்பில் மகேஷிற்கு சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு … Read more

சென்னையில் 5 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை…!

சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. அதன்படி, ராஜீவகாந்தி, ஸ்டான்லி , கீழ்பாக்கம், ஓமந்தூரார் கிண்டி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் … Read more

வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.  ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவருக்கு வயது 52. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் மதுரை அரசு … Read more

CSKvRCB – பெங்களூரு அணிக்கு 216 ரன்கள் இலக்கு…!

பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெறும் 22ஆவது ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகிறது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்தது. இந்த நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ருதுராஜ் … Read more

முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது..!

முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது.  மறைந்த பிரபல திரைப்படப்பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஏப்-24ல் நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்க்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. லதா மங்கேஸ்கர் பெயரிலான விருது முதன்முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

‘சத்குருவின் மண் காப்போம் ‘ – விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த கர்நாடக முதல்வர்..!

சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். உலகளவில் மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இவ்வியக்கம் சார்பில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தை உடுப்பி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 12) … Read more

சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வனின் கோரிக்கையை ஏற்று சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர்  அறிவிப்பு.  சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  சமூகநீதி பாதையில் செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும், ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை  வழக்குகளை  … Read more