இது #MakeinTamilnadu தான் ஆனால் #MadebyAmmaArasu – ஈபிஎஸ் ட்வீட்

ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது என ஈபிஎஸ் ட்வீட். ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து கொடுக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது தங்களது முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்கள்  அனைத்தையும் சென்னை ஆலையில் தயார் செய்ய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஐபோன் 13 தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவது  நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என்று பதிவிட்டிருந்தார் இதுகுறித்து எதிர்க்கட்சி … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டம்…!

வன்கொடுமை  வழக்குகளை  விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  சமூகநீதி பாதையில் செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும், ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை  வழக்குகளை  விசாரிக்க கூடுதல் … Read more

உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற ஈபிஎஸ்…! தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள்..!

சட்டப்பேரவைக்குள் இருந்து வெளியே வந்த ஈபிஎஸ் தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றுள்ளார்.  இன்று தமிழக சட்டப்பேரவையில் பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டப்பேரவைக்குள் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டி கொடுக்காமல் சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். அப்போது அவர் தன்னுடைய காரில் ஏறுவதற்கு பதிலாக, உதயநிதி ஸ்டாப்களின் அவர்களின் … Read more

#BREAKING : இரண்டு அரசு கல்லூரிகளுக்கு ‘கலைஞர் கருணாநிதி’ பெயர்…! – தமிழக அரசு

இரண்டு அரசு கல்லூரிகளுக்கு ‘கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்பட்டு தமிழக அரசு உத்தரவு.  குளித்தலை அரசு கலை, அறிவியல் கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டு,  டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்றும், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

#BREAKING : பரபரப்பு – பீகார் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு…!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து  கொண்ட ஜான்சபா என்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு. பீகாரில், நாளந்தாவில் நடைபெற்ற ஜான்சபா என்ற நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, விழா மேடை அருகிலேயே நாட்டு வெடிகுண்டு விசப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். வெடிகுண்டு வீச்சு தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய நிலையில், தற்போது மீண்டும் வெடிகுண்டு … Read more

#BREAKING : மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…! எதற்காக தெரியுமா…?

ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.  மதுரையில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் … Read more

இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் – நடிகை ரோஜா

இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க மாட்டேன் என ரோஜா பேட்டி.  ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட  25 அமைச்சர்கள் பதவியேற்றனர். மாநில தலைநகர் அமராவதியில் … Read more

“தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம்..!” – முதல்வர் பாராட்டு

அமைச்சர் அன்பில் மகேசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பேப்பரில் தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம் என பாராட்டு தெரிவித்துள்ளார்.  நேற்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம். முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 … Read more

ஃப்ரீ பயர் விளையாட செல்போன் கொடுக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!

ஃப்ரீ பயர் விளையாட செல்போன் கொடுக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை. கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரை சேர்ந்த தம்பதிகள் பழனி கிட்டனம்மாள். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. மூன்று பெண்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஈஸ்வரன் எட்டாம் வகுப்பும், அர்ஜுனன் ஆறாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி செல்போனில் ஃப்ரீ பையர் கேம் … Read more

பிறந்த குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து…! குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழப்பு…!

கோவையில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழப்பு.  கோவை மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து, அம்புலன்ஸ் ஒன்று பிறந்த குழந்தையுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, மலுமிச்சம்பட்டி அருகே  கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.