,

“தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம்..!” – முதல்வர் பாராட்டு

By

அமைச்சர் அன்பில் மகேசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பேப்பரில் தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம் என பாராட்டு தெரிவித்துள்ளார். 

நேற்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம். முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக செயல்படுத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டில் 9,494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15,000 ஆசிரியர் காலி  இருந்தாலும் நடப்பாண்டில் 9,494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் எவ்வித குறிப்புமின்றி 30 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பேப்பரில் தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023