முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் பேச்சு. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம். அந்த வகையில், தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் அதன் மூலம் வளர்ச்சியை காண … Read more

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்த நித்தியானந்தா!

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்தார் நித்தியானந்தா. பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா சிவா பதிவிட்டுள்ளார். அதில், நித்தியானந்தா சுவாமியிடமிருந்து கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றதில் ஆசிர்வாதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கைலாச நாட்டுக்கு தொழில் தொடங்க வருபவர்களுக்கு … Read more

#BREAKING: தமிழக காவலர்களுக்கு உள்துறை அமைச்சக விருது!

சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோருக்கும், தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் புதுச்சேரி எஸ்ஐ செல்வராகனுக்கு விருதுகள் மத்திய உள்துறை அமைச்சக விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய … Read more

முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது..!

முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது.  மறைந்த பிரபல திரைப்படப்பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஏப்-24ல் நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்க்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. லதா மங்கேஸ்கர் பெயரிலான விருது முதன்முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு விருது …!

இந்திய திரையுலகமே புகழக் கூடிய ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசை ஞானி இளையராஜா. இவர்  தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அ பியூட்டிபுல் பிரேக்கப் எனும் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இசை அமைத்ததற்காக … Read more

தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா – யார் யாருக்கு என்னென்ன விருது..?

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, உரையாற்றி உள்ளார். அந்த வகையில், இந்த விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம். விருது பெற்றோர் விபரம் : 2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது – மு. மீனாட்சி சுந்தரம் 2021ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – குமரி ஆனந்தன் திருவள்ளுவர் விருது – மு. … Read more

#BREAKING: தமிழக காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு!

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிப்பு.  நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரி ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சிவனருளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு … Read more

தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” – அரசாணை வெளியீடு.!

தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்குவதற்கான தமிழக அரசு அரசாணை வெளியீடு. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதில் தமிழகம் முதலிடம் …!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதற்காக குடியரசு தலைவர் தமிழகத்திற்கு விருது வழங்கியுள்ளார்.  மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில்2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் … Read more

முதல்வருக்கு அம்பேத்கார் சுடர் விருது – விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு …!

இந்தாண்டு முதல்வருக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவ்வாறு விருதுகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்தாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக … Read more