வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள். 

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவருக்கு வயது 52. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது இதனால் அவருக்கு இரண்டு மாதங்களாக எயிட்ஸ் நோய்க்கான மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுத்து வந்தனர். இருப்பினும் அந்த விவசாயிக்கு வயிறு வலி குறையாத காரணத்தால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எயிட்ஸ் தொற்று இல்லை என்றும் விவசாயிகள் எயிட்ஸால்  பாதிக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பித்தப்பையில் கல் இருந்ததால் தான் வயிற்று வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பித்தப்பை கல் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எயிட்ஸ் இருப்பதாக கூறியது குறித்து விளக்கம் கேட்டார். இதனையடுத்து, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.