கர்வா சௌத் விரதம் : சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள்…!

கர்வா சௌத் விரதத்தின் போதும் சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள். கர்வா சௌத் என்பது கணவனின் ஆயுள் நிலைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருக்கும் விரதம் ஆகும். வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த விரதம் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாக முன்னிருந்து மாலையில் சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். இந்த விரதம் ஐப்பசி மாத பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் … Read more

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி! – திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்.  சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விசிக, இடதுசாரிகள் சார்பாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டன. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை … Read more

அக்டோபர் 15-க்குள் சிங்கார சென்னை 2.0.! சென்னை மேயர் அதிரடி அறிவிப்பு.!

அக்.15க்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என சென்னை மேயர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சென்னை … Read more

தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

8 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பாஜக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடிக்கிறது.  தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், 22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது; தமிழக அரசின் கோரிக்கையை … Read more

இது தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி – கேப்டன் விஜயகாந்த்

 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக அரசு கடிதம் அனுப்பியதை வரவேற்கிறேன் என விஜயகாந்த் அறிக்கை.  22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தேமுதிக … Read more

தமிழகத்தில் தேவாங்குகளுக்கு சரணாலயம்…! – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியில் தேவாங்கு சரணாலயம்.  தமிழக அரசு, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்கும் வண்ணம்  தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  இந்தியாவில் தேவாங்குகளுக்கு அமைக்கப்படும் முதல் சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – கனிமொழி எம்.பி

தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது என கனிமொழி பேட்டி.  திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு; தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது.  மேலும், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல; அது அலங்காரமாக இருந்தாலும் சரி, … Read more

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும் – அமைச்சர் பொன்முடி

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும்  என அமைச்சர் பொன்முடி பேச்சு.  சென்னை கிண்டியில் “எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது” என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்; பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும்.அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை.! மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய … Read more

அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார் – டிடிவி தினகரன்

திமுகவினர், தமிழில் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். தமிழை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள் என டிடிவி தினகரன் பேச்சு.  தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் பேசிய டிடிவி தினகரன், திமுகவில் திணிக்கப்பட்ட தலைவர் இருப்பதால் தான் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை … Read more