அக்டோபர் 15-க்குள் சிங்கார சென்னை 2.0.! சென்னை மேயர் அதிரடி அறிவிப்பு.!

அக்.15க்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என சென்னை மேயர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், அக்.15க்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும்.

95% மழை நீர் வடிகால் பணி நிறைவு பெற்றுள்ளது. சிந்தாதிரிபப்பேட்டையில் 10,000 பேருக்கு உணவு வழங்கும் வகையில் உணவுக்கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மண்டல வாரியாக உணவு கூடங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment